தரங்கம்பாடி டிச.13- நாகை மாவட்டம், திருக்கடை யூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கடந்த 20 ஆண்டுக ளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையிலேயே இருப்பதால் நோ யாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை 1957ஆம் ஆண்டு அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலம் திறந்து வைத்துள்ளார். தற்போது இந்த கட்டடம் பழுதடைந்து, சுவர் விரிசல் அடைந்து, மேற்கூரை மோசமாக சேதமடைந்துள்ளது. ஜன்னல், கதவுகள் உடைந்து பாது காப்பற்ற நிலையில் இருப்பதால் மழைக் காலங்களில், பெரும்பா லான இடங்களில் மழை நீர் உள்ளேயே விழுகிறது. நோயாளி கள், ஊழியர்கள் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் கடும் அவதி யடைகின்றனர்.
இடிந்து விழும் நிலையில்...
மருந்துப் பொருட்கள், ஆவ ணங்களை பாதுகாக்க முடியாமல் ஊழியர்களும் சிரமப்படுவதோடு, எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே பணியாற்றும் அவல நிலை நீடித்து வருகிறது. முக்கிய கோவில் நகராக திருக் கடையூர் விளங்குவதால் நாள்தோ றும் பல்லாயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்ற னர். கோவிலுக்கு வருபவர்களில் யாருக்காவது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிப்பதற்கான வசதி களை இன்னும் கூடுதலாக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய சுகாதார நிலையமாக இருப்பதால் 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவ மனைக்கு சுற்று வட்டார பகுதி களான பிள்ளைப்பெருமாள் நல்லூர், டி.மணல்மேடு, அபிஷேக கட்டளை, இரவணியம் கோட்டகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் மருத்துவ தேவைக்கு இந்த சுகாதார நிலை யத்தை நம்பித் தான் உள்ளனர்.
படுக்கை வசதி, இருக்கை வசதி பற்றாக்குறை
தினமும் 200 க்கும் மேற்பட் டோர் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். இங்கு போதிய கட்டிட வசதியும், குடிநீர் வசதி யும் இல்லை. மேலும் உள் நோயா ளிகளுக்கு போதிய படுக்கை வசதி யும் இல்லாததால் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். சிறிய அள விலான கட்டிடத்தில் மருத்துவ மனை செயல்படுவதால் ஊழியர் கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரு கின்றனர். மேலும் நோயாளிகள் அமர்வ தற்கு போதிய இருக்கை வசதி இல்லாததால் ஆங்காங்கே தரையில் அமர்ந்து கொள்ளும் நிலை உள்ளது. உடனடியாக இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டி டத்தை கட்டி நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.