tamilnadu

img

அரசால் கைவிடப்பட்ட நிலையில் நாவல்காடு கிராமம்... சுகாதாரமும் அடிப்படை வசதிகளும் சீர்குலைந்த அவலம்

கழிவு நீரும் குப்பையும் நிரம்பியதால் நடைபாதையை கைவிட்டாலும் துர்நாற்றத்தாலும் கொசுக்கடியாலும் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம்.அரசுப்பள்ளி, ரேசன் கடை போன்றபொது இடங்களை மையப்படுத்திய குப்பை மேடு… என சுகாதாரத்துக் கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக சீர்குலைந்து கிடக்கிறது நாவல்காடு கிராமம்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் ஈசாந்திமங்கலம் ஊராட்சியில் உள்ளது நாவல்காடு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்குள் நுழையும்போதே மந்தாரபுரத்தின் குப்பைக் குவியலும் சாலையில் வழிந்த சாக்கடை கழிவுகளின் துர்நாற்றமுமாக முகம் சுளிக்க வைக்கிறது. கிராமத்தின் மையமாக நூலகத்தின் அருகில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில்உள்ளது 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி. இரண்டுஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாததற்கு துண்டிக்கப் பட்ட குழாய்களும், சுத்தம் செய்த காலக்குறிப்பும் சாட்சியமாக உள் ளன. அப்படியென்றால் குடிநீர் எப்படி விநியோகிக்கப்படுகிறது? இப் பகுதி வார்டு உறுப்பினர் எம்.சுலோசனாவிடம் கேட்டபோது, ‘நீலகண்ட குளத்துக்குள் கிணறு அமைத்து நேரடியாகவே குளத்து நீர் குழாய் மூலம் வழங்கப்படுகிறது’ என்றார்.

தொட்டியை கழுவி 3 ஆண்டாச்சு
தும்பவிளை, பெரியார் காலனியில் உள்ள மேல் நிலை தொட்டிகளுக்கும் அந்த தண்ணிதான் ஏற்றப்படுகிறது. அந்த தொட்டியை கழுவி3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு உறுப்பினர் பேதுரு. அது மட்டுமல்ல, அந்த பகுதிகளுக்கான வழியில் உள்ள 15 தெருவிளக்குகளும் எரியவே இல்லை. வழிப்பறி திருட்டு, பாம்பு கடித்து மரணம்கூட நடத்திருக்கு. இதையெல்லாம் ஜனவரி 26 கிராமசபைக் கூட்டத்திலேயே குறிப்பிட்டு மனுவும் கொடுத்தோம். 7 மாசமாச்சு,ஒரு நடவடிக்கையும் இல்லை. வார்டுமெம்பர் சுலோசனா அவரது சொந்தசெலவுல சாக்கடை அடைப்புகள நீக்கி சுத்தம் பண்ணினா, பஞ்சாயத்துதலைவரு, அதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க. டெண்டர் விட்டாச்சுன்னு சொல்லி, கழிவுகளை எடுக்க விடல.அப்படியே கிடக்கு. ரேசன் கடை,பால் பண்ணைக்கு வாறவங்க துர்நாற்றத்தால மூக்கப் பொத்திட்டுதான் நிக்கணும் என்று கூறினார். சுகாதாரமற்ற குடிநீர் தான் அனைவருக்கும் கிடைப்பதாக கூறினார்அஜிதா. மேலத்தெரு குறுக்குத்தெருசந்திப்பில் உள்ள அடிபம்பு ரிப்பேர்பார்த்து அந்த பகுதியை சுத்தப் படுத்தினாலாவது நல்ல தண்ணி கிடைக்கும் என்றார். நான்கு மாதங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்ததும்ஊரில் உள்ள சாக்கடை கழிவு முழுவதும் மேலத்தெருவில் உள்ள மாடத்தம்புரான் கோயிலை சூழ்ந்து நின்றதாக கூறினார் சங்கரன். நாங்களே அதை எல்லாம் வெளியேற்றி கோயிலையும் வெளியே இருந்த சிலையையும் சுத்தம் பண்ணி வச்சிருக்கோம். இப்பவும் சுற்றி சாக்கடை கழிவுதேங்கி நிக்கறதால கொசுத்தொல்லை தாங்க முடியல. எங்க வீட்லயும் பக்கத்து வீட்லயும் இப்பதான் குழந்தைபிறந்திருக்கு. டெங்கு மலேரியா வந்திடுமோன்னு பயமாக இருக்கு, என்றார்.இப்பகுதியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரியை தொடர்பு கொண்ட போது அவரது கணவர் கோலப்பன் பேசினார். மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளுக்காக உள்ள ஒன்றிய பொது நிதிரூ.3 லட்சத்துக்கு மேல கொரோனாசிறப்பு முகாமுக்கு கொடுத்திருக்கிறாங்க. ஜேம்ஸ் காலேஜில் உள்ளஅந்த முகாமில் என்ன செலவு செய்திருக்கிறாங்கன்னும் தெரியல. ஊராட்சியில் எந்த பணியும் நடக்கல என்றார்.

புதனன்று (ஜுலை 22) நாவல்காடு கிராம மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் மிக்கேல், மணி, பேதுரு உள்ளிட்டோர் சந்தித்து பேசியதுடன் சுகாதாரச் சீர்கேடுகளை பார்வையிட்டனர். அதுகுறித்து அவர்கள் கூறுகையில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், இந்த கொரோனாகாலத்தில்கூட உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியம் ஆபத்தானது. உடனடியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை எனதெரிவித்தனர்.நாவல்காடு கிராமம் பல்வேறுசாதி, மதங்களைச் சேர்ந்த மக்களின்ஒற்றுமையின் அடையாளமாக இயல்பான சமத்துவபுரமாக உள்ளது. அதன் பயனாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நீண்டகாலத்துக்கு முன்பே செய்யப்பட்டுள்ளன. ஆனால்,தற்போதைய மக்கள் பெருக்கத் துக்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைக்கப்படாததும் இந்த சீர்குலைவுக்கு காரணமாக உள்ளது. அதுவே ஸ்வச்பாரத் திட்டத்தின் பெரும் தோல்வியை தோலுரித்துக்காட்டுவதாகவும் உள்ளது.

====சி.முருகேசன்===