tamilnadu

img

குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம், சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 8- உடையாம்பாளையம், சின்ன வேடம்பட்டி பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ கட்சியினர் சின்ன வேடம்பட்டி அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத் தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சிக்குட் பட்ட உடையாம்பாளையம், சின்ன வேடம்பட்டி பகுதிகளில் நூற்றுக்க ணக்கான குடியிருப்புகள் உள்ளது.  சின்னவேடம்பட்டி பேரூராட்சி யாக இருந்தபோது அனைத்து அடிப் படை வசதிகளும் தங்கு தடையின்றி இப்பகுதி மக்களுக்கு கிடைத்து வந் தது. தற்போது மாநகராட்சியோடு இப்பகுதி இணைக்கப்பட்ட பிறகு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்குக்கூட பொதுமக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் செவ்வாயன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் சின்னவேடம்பட்டி மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதில், அத்திக்கடவு குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை முறையாக வழங்க வேண்டும்.

வஞ்சி அம்மன் நகர் முதல் வீதி குடியி ருப்புகளுக்கு முறையான குடி நீர் வழங்க வேண்டும். போர் வெல்  நீரை தினமும்  2 மணிநேரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க வேண்டும்.  அத்திக்கடவு மூன்றாம் திட்ட பணிக் காக தோண்டப்பட்டு குண்டும் குழி யுமாக உள்ள லட்சுமி நகர், மாரியம் மன் நகர்,  கணேஷ் அவுன்யூ, கந்த சாமி நகர் எக்ஸ்டென்சன், பார்க் டவுன்,  வேலன் நகர்,  காந்தி நகர் மேற்கு பகுதி,  அம்மன் நகர்,  நல்லா கவுண்டர் நகர், ஆர்சி  கார்டன் ஆகிய பகுதி சாலைகளை சீரமைத்து தார் ச் சாலை அமைத்து கொடுக்க வேண் டும்.  பாலாஜி நகர் பூங்காவை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்ப டைத்திடு உள்ளிட்ட கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.இராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர் சிவ சாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் விஜயலட்சுமி, காந்திநகர் கிளைச் செயலாளர் துரைசங்கர், சின்னவேடம்பட்டி சின்னு, குருதா சலம், சிபிஐ எம்.ஆனந்தன், பாண்டி யன் உள்ளிட்ட தலைவர்கள் அதிகா ரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற் றுக்கொண்ட அதிகாரிகள் பத்து நாட்களுக்குள் தீர்வை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.