அவிநாசி, அக். 12- அவிநாசி அருகே ராக்கியபாளையம் மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து தற்போது பாலம் கட்டும் பணி தொடங்கியது. அவிநாசி, திருமுருகன்பூண்டி அருகே, ராக்கிய பாளையம் – அம்மாபாளையம் இடையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையைக் கடக்க, கடந்த காலங்களில் தரைமட்ட பாலம் இருந்தது. மழைக்காலங்களில், பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படு வது வழக்கம். இதனால், மக்கள் சாலையைக் கடந்து செல்ல முடியாமல் திணறினர். சில ஆண்டுகளுக்கு முன் ஏற் பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள், வாக னங்கள் வெள்ளத்தில் சிக்கினர். எனவே, ‘இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண் டும்’ என, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலி யுறுத்தி வந்தனர். அதன் விளைவாக, மாநில நெடுஞ் சாலைத்துறை சார்பில் பாலம் கட்டப்படும் எனக் கூறப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த சாலை உட் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1.99 கோடி ரூபாய் செல வில், தார் சாலையுடன் கூடிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பாலம் கட்டும் பணிக்கென மட்டும், 48 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இப்பணி ஓரிரு மாதத்தில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.