tamilnadu

img

செகுடந்தாளி முருகேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி

கோவை, நவ. 17- கோவை, சோமனூரை அடுத்த செகுடந்தாளி முருகேசனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது சோமனூர் அருகே செகுடந் தாளி பகுதியைச் சேர்ந்தவர் முரு கேசன். விசைத்தறி தொழிலாளி யான இவர் கடந்த 20 ஆண்டுக ளுக்கு முன்பு அரசு பேருந்தில் அமர்ந்து சென்ற நிலையில் ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் பேருந்தில் அமர்ந்து செல்வதா என  தகாத வார்த்தைகளால் பேசி தாக்கப் பட்டார். இதுகுறித்து செகுடந் தாளி முருகேசன் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.  இந்நிலையில், வழக்கினை திரும்ப பெறக்கோரி ஆதிக்க சாதி யினர் முருகேசனை அச்சுறுத்தி வந்தனர். ஆனால் அவர்களின் அச்சுறுத்தலுக்குப் பணியாத நிலையில் செகுடந்தாளி  முருகே சனை  கொடூரமாக தாக்கி படு கொலை செய்தனர். இப்படு கொலையைக் கண்டித்து சோம னூர் பகுதியில் பல்வேறு தலித்  அமைப்புகள் போராட்டம் நடத் திய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் செகுடந்தாளி சென்று முருகேச னின் குடும்பத்தினரை நேரில் சந் தித்து ஆறுதல் கூறினர். மேலும்,  இப்படுகொலையில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வலியுறுத்தி யும், முருகேசனின் குடும்பத்தின ருக்கு அரசுப் பணியும், இழப்பீட் டுத் தொகையும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத் தனர்.   மேலும் பாதிக்கப்பட்ட முரு கேசனின் குடும்பத்திற்கு நியா யம் கேட்டு பல்வேறு தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் கைது செய் யப்பட்டனர். முருகேசனின் மனைவி கருப்பாத்தாளுக்கு சத்துணவு வேலை வழங்கப்பட் டது. மேலும் அந்த குடும்பத்தின ருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை யும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.  இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் செகுடந்தாளி முருகே சனின் நினைவு தினத்தன்று மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் அவரது நினை விடத்திற்கு சென்று அஞ்சலி  செலுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஞாயிறன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணை பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம் மாவட்ட  செயலாளர் ஆறுச்சாமி,  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செயலாளர்  எம்.ஆறுமுகம், சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஸ்டா லின் குமார், ததீஒமு தாலுகா  செயலாளர் சுப்பிரமணியம்,  மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதி பாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை செயலா ளர் கோபி நன்றி தெரிவித்தார்.