கோவை, ஜூன் 11 - வீட்டில் தனிமைப்படுத்தப் பட்ட நோயாளிகளின் ஆக்சி ஜன் அளவை தெரிந்து கொள்ள 20 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை வாங்கியுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கோவையில் செய்தியா ளர் சந்திப்பின் போது கூறினார்.
கோவை மாவட்டம், சிங்கநல் லூர் பகுதியில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலு மணி ஆகியோர் மருத்துவமனை யில் வளாகத்தில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி மருத்துவ மனை முதல்வர் நிர்மலா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தினர் ஆகி யோர் உடனிருந்தனர். மேலும் மருத்துவமனைக்கு வந்த அமைச் சர் விஜயபாஸ்கர் முதலில் மருத்து வர்களிடம், செவிலியர்களிடமும் சிகிச்சை குறித்தும் நோயாளிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து கொரோனா சிகிச் சைக்காக பிரத்யேகமாக ஏற்பட் டுள்ள வார்டுகளை ஆய்வு மேற் கொண்டார்.
அதன்பின்பு இருவ ரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், கோவையில் இஎஸ்ஐ மருத்துவ மனை மிக சிறப்பாக கொரோனா விற்கு சிகிச்சை அளிக்கும் மருத்து வமனையாக உள்ளது. முதல்வரிட மும் பாராட்டு பெற்ற மருத்துவ மனையாக இ.எஸ்.ஐ தொடர்ந்து பணி செய்து வருகிறது. இந்த மருத் துவமனையில் மட்டும் 280 பேர் முழுவதுமாக சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இந்நிலையில் இங்கு 43 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கூடுதலாக 400 படுகைகள் அமைப்பதற்கான ஆய்வை தற்போது நாங்கள் மேற்கொண்டுள்ளோம். பாதிப்பு அதிகம் ஆகிவிடக்கூடாது என்பதி லும் கவனமாக இருக்கிறோம்.
சென்னையில் கொரோனவை கட் டுப்படுத்துவது மிக சவாலாக உள்ளது என்றால் கொரோனா வைரஸ் முன்பு இருந்ததை விட சற்று உருமாறி இருப்பதாக மருத் துவர்களும் ஆராய்ச்சியாளர்க ளும் தெரிவிக்கின்றனர். இந்நி லையில் கொரோனா வைரசின் வீரியம் சற்று கூடியதால் மக் கள் பாதுகாப்பாக முக கவசம் அணிந்து தனி மனித இடைவெ ளியை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் மீண்டும் ஊரடங்கு தீவிரபடுத்தப்படுமா என்பதை முதலமைச்சர் மூத்த அமைச்சர்களு டன் ஆலோசனை செய்த பின் பும், மருத்துவர் குழு கொடுக்கும் ஆய்வறிக்கை குறித்தும் முடிவு செய்வார்கள். கொரோனா நோயா ளிகளை தமிழக அரசு மருத்து வமனையில்தான் சிகிச்சை கொடுத்து வருகிறது.
ஒருவேளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்துக் கொள் ளக் கூடிய சூழ்நிலை வந்தால் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்குவதோடு அவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் என்ற கரு வியை கொடுப்பதற்கான ஆலோ சனையில் அரசு இருப்பதாகவும் அதற்காக 20 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸி மீட்டரை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவம னைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக வும், அதிக கட்டணம் வசூலிப்பதா கவும் வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தனியார் மருத்துவமனை யில் படுக்கை வசதிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆன்லைன் வாயிலாக செல்போன் வசதியு டன் பார்க்கக்கூடிய அளவில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் முதல்வர் காப்பீட்டு திட் டத்தின் கீழும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கான வழி வகையிலும் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக் கிறது.
சென்னையிலிருந்து நோயாளிகளை பிற மாவட்டங்க ளுக்கு மாற்றி சிகிச்சை அளிக்கும் திட்டம் ஒருபோதும் இல்லை. சென்னை நோயாளிகளுக்கு கூடு தலாகவே வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு வதந்தி மட்டுமே என தெரிவித் தார். இதனைத்தொடர்ந்து அமைச் சர் எஸ்.பி. வேலுமணி பேசுகை யில், சென்னையிலிருந்து நோயா ளிகளை கோவைக்கு மாற்றுவ தாக விஷமத்தனமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது ஆரோக்கியமானது அல்ல என்று கண்டனத்தை தெரிவித்தார். மேலும் சுகாதாரத் துறையுடன் இணைந்து மாநகராட்சி நிர்வா கம் உள்ளாட்சி துறைகள் அனைத் தும் சிறப்பாக பணி செய்து வருவ தாகவும், மக்கள் முககவசம் அணிந்து தனிமனித இடைவெ ளியை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத் தார்.