சிதம்பரம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் குறுகிய காலத்தில் அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த கடலூர் மாவட்டம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனவிலிருந்து மீண்டு வருகிறது. தற்போது அங்கு 378 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியில் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விடுதியில் மனஅழுத்தத்தை விரட்ட மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்குகின்றனர்.
இந்நிலையில் அங்கு இருக்கும் சில இளைஞர்கள் மனஅழுத்தத்தை போக்குவதாக கூறி விடுதியின் மொட்டை மாடிக்கு சென்று கபடி விளையாடியுள்ளனர். மேலும் சிலர் அங்கு கூடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் லீக் செய்துள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஷயம் அறிந்த வருவாய்த்துறையினர் விடுதிக்கு சென்று மொட்டை மாடி பகுதியின் கதவை இழுத்து பூட்டி சென்றனர்.இந்த வீடியோ தகவலை தற்போது நெட்டிசன்கள் மீம்ஸாக டிரெண்ட் வருகின்றனர்.