tamilnadu

வாலிபர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு

சென்னை, ஆக. 18 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்  கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு  முதல் அமல்படுத்த வலியுறுத்தி திங்க ளன்று (ஆக.17) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தின. இதனையொட்டி சென்னை நுங்கம்  பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக மான சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில கலந்து கொண்ட மணி (மத்தியசென்னை மாவட்ட துணைத்தலைவர்), கார்த்தீஸ்குமார் (மாநில  துணைத்தலைவர்), சுரேஷ்குமார் (தென் சென்னை மாவட்டத் தலைவர்), மஞ்சுளா (மத்தியசென்னை மாவட்டச் செயலாளர்) மற்றும் 12 பெண்கள் உள்ளிட்டு 60 பேர் மீது  ஐபிசி 143, 188, 269 மற்றும் மாநகர காவல்  சட்டம் 41(6) ஆகிய பிரிவுகளின் கீழ் நுங் கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.