tamilnadu

img

உளுந்தூர்பேட்டையில் உங்கள் விளையாட்டு விழா

உளுந்தூர்பேட்டையில் உங்கள் விளையாட்டு விழா

கள்ளக்குறிச்சி,ஜன.16 - உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உ.கீரானூர் கிராமத்தில் 28-ஆம் ஆண்டு உங்கள் விளையாட்டு விழா (ஜன-15)வியாழனன்று நடை பெற்றது. இதில் கவிதை, கட்டுரை, ஓவியம்,வினாடி வினா, மாறுவேட போட்டி, சது ரங்கம்,கயிறு இழுத்தல், கோலப்போட்டி, இசை நாற்காலி,உயரம் தாண்டு தல், நீளம் தாண்டுதல், சாக்குப் போட்டேன்,என பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் பட்டது. மாலை பகத்சிங் திடலில் நடைபெற்ற விழா வில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், பரத நாட்டியமும் அரங்கேற்றப் பட்டது, இதில் கிளை தலைவர்ஆர்.கோபி நாதன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் எம். ஸ்ரீநிஷாந்த் வரவேற்புரை ஆற்றினார், தமுஎகச மாவட்ட செயலாளர் கு.சுதா மதங்களைக் கடந்த மனி தம், சாதிகளை தகர்த்தும் சமத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு எம்.ஆறுமுகம்,வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.சதீஷ்குமார்,மாவட்ட செயலாளர் மு.சிவக்குமார், வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் எம். கே.பழனி,சிபிஎம் நகரச் செயலாளர் பி.ஸ்டாலின், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வாலிபர் சங்க நகர செயலாளர் ஏ.ரிச்சர்ட்பிரபு,நகர செயலாளர் எம்.தீபன்ராஜ்,பொருளாளர் இ.கார்த்திகேயன்,துணைச் செயலாளர் பி.சின்னராசு,ஏ.சாம்சன்,ஏ.நவீன் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். கிளை துணைத் தலை வர் ஜி.கோமதி நன்றி கூறி னார்.