உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு, ஆதிவாசி மக்களுக்கு பெ. சண்முகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 476 மில்லியன் ஆதிவாசிகள் உள்ளனர். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதமாகும். இவர்கள் 5,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான கலாச்சாரங்களையும், 4,000-க்கும் மேற்பட்ட மொழிகளையும் பேசுகின்றனர்.
1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UN General Assembly) இந்த தினத்தை அறிவித்தது. இந்த தினம் உலகம் முழுவதும் உள்ள ஆதிவாசி மக்களின் உரிமைகள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நிலம், மொழி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் உரிய உரிமைகளைப் பெறச் செய்யவும் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வாழும் ஆதிவாசி மக்களுக்கு எனது வாழ்த்துகள். நமது உரிமைகளை பாதுகாப்போம்; தடைகளை தகர்த்து மேலும் முன்னேறுவோம் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.