world

img

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 31 பேர் உயிரிழப்பு

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான பிரச்சனையில் ஓமன் நாட்டின் முன்னெடுப்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்ட, அடுத்த 24 மணி நேரத்திற்குள், எவ்வித முன்னறிவிப்பு மின்றி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2026  பிப்ரவரி 28 அன்று அதிகாலை தொடங்கி நடத்தப்பட்ட இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையில், காமேனி உட்பட ஈரானின் 40-க்கும் மேற்பட்ட உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. 
காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.