சென்னை, ஜூலை 23- நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஒப் பந்த ஊழியர் வினோத் குமாரை பணியில் செய்ய அனுமதி மறுப்பது குறித்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீஸ் ஒட்டி யது தொடர்பாக வினோத் குமாரை பணிநீக்கம் செய்து சுகாதார ஆய்வாளர் முத்து ரத்தினவேல் உத்தரவிட்டார். இதனை விசாரித்த மண்டல அலுவலரும், இணை ஆணையரும் தன்னை பணி யில் சேரும்படி கூறினர். ஆனால், தன்னை பணியில் சேரவும், வருகை பதிவில் கையெழுத்திடவும் சுகாதார ஆய்வாளர் அனுமதி மறுப்ப தாக கூறி, வினோத்குமார் மாநில மனித உரிமை ஆணை யத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயசந்திரன், இதுசம்பந்த மாக நான்கு வாரங்களில் விரி வான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.