tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வார இறுதி விடுமுறை: 725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, பிப்.5- சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக நாளை முதல் 725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்க த்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மொத்தம் 495 பேருந்து களும், கோயம்பேட்டி லிருந்து 110 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும், பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து மற்ற ஊர்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  ஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஊர் திரும்பவும் பயணிகளின் தேவைக் கேற்ப பேருந்து கள் இயக்கப்படும் நிலை யில், இதுவரை 21,000-க்கும் மேற்பட்டோர் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பய ணிக்க போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, பிப்.5- சென்னையில் தங்கம் விலை  சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 560 க்கு விற்பனை செய்யப் பட்டது. ஒரு கிராம் ரூ.580 குறைந்து ரூ. 14,320-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் வியாழனன்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

கார்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து

சென்னை, பிப்.5- சென்னையிலிருந்து பொத்தேரி நோக்கிச் சென்ற கோபி என்பவரது கார், தைலாவரம் சிக்னல் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த கோபியும் அவரது மனைவியும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.  இதேபோல், மதுராந்தகம் மேட்டுப் பாளையம் அருகே திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மற்றொரு காரும் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட கரும்புகை காரணமாகத் தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உடனடியாகக் கீழே இறங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.