tamilnadu

img

ஷில்லாங் மேகாலயாவில் வெடிவிபத்து 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு?

ஷில்லாங் மேகாலயாவில் வெடிவிபத்து 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு?

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தாஷ் காய் பகுதியில் நிலக் கரி சுரங்கம் செயல் பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் வியா ழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத் தில் 16 தொழிலாளர் கள் உயிரிழந்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெடிவிபத்து சுரங்கத்திற்கு அடியில் நிகழ்ந்ததால், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்குப் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசார ணையிலும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கையில் முரண்பாடு மேகாலயா சுரங்க வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக வியாழனன்று இரவு 7 மணியளவில் செய்திகள் வெளியாகின.  ஆனால் அதன்பிறகு 8 பேர் மட்டுமே பலி யானதாக மற்றொரு தகவலும் வெளியா கின. இதனால் பலி எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டது.