tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நாடாளுமன்றத்தில்...

காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே நாடாளு மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகை யில்,“நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதையும் தெரிவிக்காமல் மோடி அரசு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஏன்? இந்த ஒப்பந் தம் தொடர்பாக 3 முக்கிய கேள்விகள் உட்பட பலவற்றுக்கு மோடி அரசு பதி லளிக்கவில்லை. அமெரிக்க அழுத்தத் தால் இந்தியா எந்த விதத்திலும் சமர சம் செய்ததா? அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 0% வரி என அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். அப்படியென்றால் இதற்கு இந்தியா ஒப்புக் கொண்டதா? இந்த ஒப்பந்தத்தால் நம் நாட்டின் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பார்களா? அமெரிக்க வேளாண் சந்தைக்கு, நம் நாட்டின் வேளாண் துறையை திறந்து விடப்பட்டுள்ளதா? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துமா? இது தொடர்பாக ரஷ்யாவிடம் இந்தியா என்ன கூறியது? இவற்றுக்கான பதிலை அறிய நாடாளுமன்றத்துக்கும், 140 கோடி மக்களுக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடி எப்பொழுது விடை அளிப்பார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

‘சீர்குலையும்  ஒன்றிய அரசு- மாநில  உறவு’

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி., சந்தீப் குமார் பதக் கூறுகை யில்,“ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் மோசமாக உள்ளது. சொல்லப்போனால் அது முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் இந்தியாவால் வளர்ச்சி அடைய முடியுமா?” என அவர் குற்றம்சாட்டினார்.