states

img

பீகார் தேர்தல்  முடிவுகளை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பீகார் தேர்தல்  முடிவுகளை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீகார் மாநில சட்ட மன்றத் தேர்தல் நடை பெற்றது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்), விதிகளை மீறி மக ளிருக்கு ரூ.10,000 நிதி, வாக்கு எண்ணிக் கையில் முறைகேடு புகார் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றி யது. இந்நிலையில், பீகார் தேர்தல் முடி வுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி,“தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்தை விதிகளை மீறி முதல மைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெண்களுக்குத் தலா  10,000 ரூபாய் பணத்தை பீகார் அரசு நேர டியாக கொடுத்துள்ளது. இது நேர்மை யான தேர்தல் நடைமுறையைப் பாதித்துள்ளது. இதனால் பீகார் மாநி லத்தில் மீண்டும் புதிய தேர்தலை நடத்த வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சூர்யா காந்த், நீதிபதி ஜாய் மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளியன்று விசாரணை க்கு வரவுள்ளது.