சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றவாளிகளைப் போல நடந்துகொள்கின்றனர். போலியான ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் குறிப்பாகச் சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்குவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
புதனன்று அவையில் 3 பெண் எம்.பி.,க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுகிறார். பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை.
திரைக்கலைஞர் கிஷோர்
வாழ்க்கையில் ரிவர்ஸ் என்ற காலத்திற்கு பின்னால் பயணிக்கும் முறை இருந்தால் 2014க்கு போய் பிரதமரை மாற்றியிருப்பேன். இந்தியாவே மாறியிருக்கும். நாட்டில் வெறுப்புணர்வு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதை மாற்ற பல ஆண்டுகள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஆபத்தானவர்கள். அன்பு இல்லையென்றால் எதுவுமே இருக்காது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி
கிரிக்கெட்டில் யாரையும் தாக்காமல் கமெண்ட்ரி செய்வது ஒரு கலை. அணி தோல்வியடைந்தால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் மனதை புன்படுத்தாமல் அதை கையாள்வதற்கு திறமை வேண்டும்.
