அடகு போன இறையாண்மையும், ஆட்டம் காணும் பொருளாதாரமும்
புதுதில்லி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், செவ்வாய்க்கிழமை மாலை மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரையில், ஆளுங்கட்சியினரின் கொள்கைகளை ஆதாரப்பூர்வமாக விளாசினார். சமூக வலைதள அரசியல் முதல் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வரை அவர் முன்வைத்த காரசாரமான விவாதங்களின் தொகுப்பு இதோ:
‘எக்ஸ்’ தள அரசியலும் பறிபோகும் நாடாளுமன்ற மாண்பும் உரையைத் தொடங்கிய ஜான் பிரிட்டாஸ், “நமது அமைச்சர்கள் அனைவரும் டொனால்டு டிரம்ப்பைப் புகழ்ந்து பாராட்டுவதற்காக எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ (X) தளத்தையே நம்பி யிருக்க வேண்டியிருக்கிறது. இந்த உயரிய சபை எலான் மஸ்க்கின் தளத்தை விட முக்கியத்து வம் குறைந்ததா?பிரதமரும் அமைச்சர்களும் நாடாளுமன்றத்தை விட அந்தத் தளத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது, எந்தவொரு கொள்கை முடிவையும் சபை யிலேயே அறிவிக்க வேண்டும் என்ற மரபு இங்கே சிதைக்கப்படுகிறது” என்று வேதனை யுடன் குறிப்பிட்டார். அமெரிக்க ஒப்பந்தம்: 50 லட்சம் கோடி ரூபாயும் விவசாயப் பாதிப்பும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள மூன்று முக்கியக் கொள்கைகள் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக அமையும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்: l இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது. l வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டு, முக்கியப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி (Zero Tariff) விதிக்கப்பட வேண்டும். l சுமார் 500 பில்லியன் டாலர் (சுமார் 45 முதல் 50 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும். “இந்த 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பி லான இறக்குமதியால், அமெரிக்காவின் இயந்தி ரமயமாக்கப்பட்ட குறைந்த விலையிலான சோயா, மக்காச்சோளம் மற்றும் பால் பொ ருட்கள் இந்தியாவிற்குள் வெள்ளமெனப் பாய்ந்துவிடும். இது நமது நாட்டின் முதுகெ லும்பான விவசாயத் துறையை முற்றிலுமாக அழித்துவிடும்” என்று ஜான் பிரிட்டாஸ் எச்சரித்தார். “டொனால்டு டிரம்ப் தான் இந்தியாவின் பெட்ரோலிய அமைச்சரா?” விவாதத்தின் போது, ஒன்றிய அமைச்சர வை குறித்து அவர் எழுப்பிய கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர் யார்?” என்று அவர் கேட்டபோது, மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் குறுக்கிட்டு “திரு. ஹர்தீப் சிங் பூரி” என்று பதிலளித்தார். அதற்குப் பதிலடி கொடுத்த பிரிட்டாஸ், “உண்மையில், டொனால்டு டிரம்ப் தான் இந்த நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர். யாரிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும், யாரிடம் நிறுத்த வேண்டும் என்று அவர்தான் உங்களுக்குக் கட்டளையிடுகிறார். ஈரானிடமும் ரஷ்யாவிடமும் எண்ணெய் வாங்கு வதை நிறுத்தச் சொன்னால் நாமும் நிறுத்தி விடுகிறோம். ஜனநாயகத்தின் தாய் என்று பேசும் நாம், நமது இறையாண்மையை ஏன் இப்படி அடகு வைக்கிறோம்? நாம் அணிசேரா நாடுகளின் தலைவராக இருந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார். பொருளாதாரச் சரிவும், வஞ்சிக்கப்படும் கேரளாவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்துப் பேசிய அவர், “60-ஆக இருந்தபோது ரூபாய் ஐசியூ-வில் இருப்பதாகச் சொன்னீர்கள். இன்று 92-ஐத் தொட்டுவிட்ட ரூபாய் மதிப்பு, மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் வற்றிவிட்டன” என்று சாடினார். மேலும், கேரளாவுக்கு அளிக்க வேண்டிய எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மற்றும் இதர திட்டங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதையும், ஒன்றிய அமைச்சராக உள்ள சுரேஷ் கோபிக்குக் கொடுத்த வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப் gடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். கேரளா பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியை வழங்கும் முன்மாதிரி மாநிலம் என்பதை அவர் பெருமையுடன் பதிவு செய்தார். பிளவுவாத அரசியலும், வரலாற்று முழக்கங்களும் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள் இன்று நாட்டைச் சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்தும் முழக்கங்களை அவையில் எழுப்புவதைக் கண்டித்த அவர், “அரசியல் நிர்ணய சபையில் இரண்டே முழக்கங்கள்தான் எழுப்பப்பட்டன: ஒன்று ‘ஜெய் ஹிந்த்’, மற்றொன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’. இந்த நாட்டைப் பிரிக்க நீங்கள் எவ்வளவு முயன்றாலும், கேரளாவிற்குள் உங்க ளால் நுழைய முடியாது. கேரளாவில் உங்க ளுக்கு நாங்கள் ஓர் அடி இடம் கூட கொடுக்க மாட்டோம்” என்று உறுதியாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். (ந.நி)
