states

img

யானைக் கூட்டம் மிதித்ததில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

யானைக் கூட்டம் மிதித்ததில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மலை மற்றும் வனப்பகுதி கொண்டதாகும். இந்த பொகாரோ நகருக்கு அருகே மஹுவதா னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்கிபுன்னு கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை 3  மணியளவில், 5 யானை கள் கொண்ட கூட்டம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை மிதித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக மஹுவதானர் வனத்துறை அதிகாரி சந்தீப் சிண்டே கூறுகையில்,“நெல்லைத் தின்பதற்காக யானைக்கூட்டம் வீட்டைத் தாக்கி, வீட்டின் ஒரு பகுதியைச் சேதப் படுத்தியுள்ளது. அப்போது வீட்டிலிருந்த மூவரும் உயிர் பிழைக்க வெளியே ஓட முயன்றனர். ஆனால் வீட்டின் வெளியே யானைகளால் 3 பேரும் மிதித்துக் கொல் லப்பட்டனர்” என அவர் கூறினார். பர்கிபுன்னு கிராமம் மிகச் சிறியது என்ற நிலையில், யானைக் கூட்டத்தால் அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.