சென்னை:
திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கழிவு நீர் கலந்தகுடி தண்ணீரை குடித்ததால்இம் மாதம் 9 ஆம் தேதியிலிருந்து வாந்தி பேதி, வயிற்றுப்போக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். திருவாரூக்கு சென்றபோது இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மருத் துவமனைகளில் சிசிக்சை பெற்று வந்தவர்களை சந் தித்து நலம் விசாரித்தார். மேலும் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களை கேட்டுக் கொண்டார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் கட்சியின்நிர்வாகிகளும் தொண்டர் களும் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு உதவி செய்து வருகிறார்கள். இதுகுறித்து விரிவான செய்தி‘தீக்கதிர்’நாளேடு வெளியிட்டது.
இந்நிலையில், திங்களன்று(மார்ச் 16) இந்த பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன்,“எனது தொகுதியிலுள்ள திருவாரூர் நகர மக்களும், வேலைவாய்ப்பு தேடி வந்தவர்களும்குடி தண்ணீர் பருகியதால் வாந்தி பேதி வயிற்றுப் போக்குதொற்று நோய் பரவி வருகிறது. இதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? என்றார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர்,“திருவாரூர் பகுதியில் ஏற்பட்ட இந்த பிரச் சனை குறித்து பொது சுகாதாரத்துறை ஊழியர்கள் உடனடியாக ஆய்வு நடத்தினர்.அப்போது. அம்மையர்பட்டி என்ற பகுதியில் குடி தண் ணீர் குழாயில் ஏற்பட்ட தண் ணீர் கசிவால் பிரச்சனை ஏற் பட்டதை கண்டுப்பிடித்து உடனடியாக சரி செய்து விட்டனர். மொத்தம் 33 நபர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மேற் கொண்டு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது என்றார்.