சென்னை:
உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் திமுகவிலிருந்து நீக்கப் பட்ட ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் தாக்கல் செய்த முறையீடு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலகிருஷ் ணன், " சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கொண்டு வந்த விவகாரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் களுக்கு உரிமை மீறல் அனுப்பப்பட்டது.இந்த வழக்கில் மற்ற திமுக உறுப்பினர்களின் சார்பான வாதங்களையே தன் தரப்பு வாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து முறையிட்டார். அப்போது நீதிபதிகள், விசாரணையின் போது எங்கு சென்றீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு தள்ளுபடி செய்யப் பட்டு விட்டது. உரிய மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என தெரிவித்தனர்.