tamilnadu

img

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: மேத்யூ சாமுவேல் மனு தள்ளுபடி

சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக முதலமைசர் பழனிசாமி, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும்சயான், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில், ராதாகிருஷ்ணன் ஆகிய ஏழுபேருக்கு எதிராக, 1 கோடியே 10 லட்சம்ரூபாய்  நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதலமைச்சர் குறித்து பேசவும், 
எழுதவும் இடைக்கால தடை விதித்ததோடு, மேத்யூ சாமுவேல் உள்பட ஏழு  பேரும்மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, முதலமைச்சர் தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும், முதலமைச்சரின் மனுவுக்கு பதிலளிக்க மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.