tamilnadu

img

சாத்தான்குளம் விவகாரம்.... 3 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி... 

மதுரை 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளும், தந்தை மகனுமான பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 5 காவலர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும்  நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய அப்ரூவராக இருந்த எஸ்.ஐ பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 

இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் 3 பேர் ஜாமீன் மனு கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் தெரிவித்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்தது. 

சிபிஐ வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் அளித்த தகவலின்படி,"பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் காரணமாகவே  பென்னிக்ஸ், ஜெயராஜ் உயிரிழந்துள்ளனர். பென்னிஸ் உடலில் 13 இடங்களில் காயமும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களில் காயமும் இருந்துள்ளன. இருவரும் அந்த காயங்களின் ரத்த கசிவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். காவலர் தாமஸ் காவல்நிலையத்திற்குள் யாரும் வர முடியாத படி காவல்நிலையத்தை இழுத்து மூடியுள்ளார். இன்னும் விசாரணை முழுமையாக நிறைவடையவில்லை. பலரிடம் இன்னும் விசாரணை செய்ய வேண்டும்" என அவர் வாதிட்டுள்ளார். 
இதன்மூலம் காவலர்களின் 3 ஜாமீன் மனு தள்ளுபடி செய்வதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அறிவித்துள்ளது.