வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, கடத்திச் சென்ற அமெரிக்கவின் அடாவடியை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாமக்கல் மாவட்டம், வெப்படை நால் ரோட்டில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பெருமாள், சி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
