tamilnadu

img

வேலூர் மாவட்ட தலைவர்கள் நினைவுச் சுடர்

வேலூர், ஜன. 22- சிஐடியு அகில இந்திய மாநாட்டையொட்டி தமிழக ஸ்தாபக தலைவர்களில் ஒரு வரான மறைந்த தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடர் பயணம் வடசென்னை மாவட்டச் செயலாளர் சி. திரு வேட்டை தலைமையில் புறப்பட்டது.  இந்தக்குழு வுக்கு வேலூரில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்பி. ராமச்சந்திரன் தலைமையில் ஆர்டிஓ சாலையில் வர வேற்பளிக்கப்பட்டது. முன்னதாக வேலூர் மாவட்டத்தின் 7 இடங்களி லிருந்து  ஆர். வீரப்பன், எஸ்.ஆர். எல்லப்பன், வே. கண்ணன், கே.ஆர்.சுந்தரம், வி.இ.ஏகநாதஈஸ்வரன், கே.ஏ.சுந்தரவேலு, டி.ஜெகன்  நாதன், ஏபி.கோபாலன், ஹரி ஹரன் ஆகியோர் நினைவாக சுடர் கொண்டுவரப்பட்டு திருவேட்டை தலைமை யிலான அகில இந்திய மாநாட்டு விபி.சிந்தன் நினைவுச் சுடர் குழுவுடன் இணைக்கப்பட்டது.