சிதம்பரம், ஜன.10- கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சின்னக்கடை தெருவில் நியாயவிலைக் கடை அமைத்து தர வேண் டும் என்று அப்பகுதி மக்கள் 2011ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பால கிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் கடந்த 2011 - 12ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து 3.95 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டி திறப்பு விழா நடை பெற்றது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அந்த கடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சம்பந்தப்பட்ட துறையினர் கொண்டுவர வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகி லுள்ள சலங்ககார தெருவில் தனியார் கட்டி டத்தில் இயங்கி வரும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகிறார்கள். மேலும் அந்த கடையில் 1,400க்கும் மேற் பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. எனவே அந்த கடையை இரண்டாகப் பிரித்து புதிதாக கட்டிய ரேஷன் கடையை திறந்து பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என ஒன்றி யச் செயலாளர் ரமேஷ் பாபு, நகரச் செய லாளர் வேல்முருகன் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.