tamilnadu

சென்னை விமான நிலையத்தில் பயணி திடீர் மரணம்

ஆலந்தூர், ஏப்.23-திருச்சியை சேர்ந்தவர் பெட்ரிக் ஜோசப் (61). இவர் மனைவி மற்றும் மகளுடன் பெங்களூர் செல்வதற்காக திங்களன்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு பெட்ரிக் ஜோசப் குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் சுருண்டுவிழுந்தார். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் பெட்ரிக் ஜோசப்பை மீட்டு விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெட்ரிக் ஜோசப் பரிதாபமாக இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விசாரணையில் தெரியவந்தது.