tamilnadu

டிராக்டர் ஏற்றுமதி அதிகரிப்பு

 சென்னை, மார்ச் 11- இந்தியாவின் இன்டர் நேஷ்னல் டிராக்டர்ஸ் நிறுவனம் சோனாலிகா மற்றும் சோலிஸ் என்ற பெயர்களில் டிராக்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.   இந்நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதத்திலும் 5.8விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்த 1507 டிராக்டர்களை விட, 88 டிராக்டர்கள் கூடுதலாக விற்பனை செய்து 1595 என்ற இலக்கை எட்டியுள்ளது. ஏற்றுமதி சந்தையிலும் முதல் நிலையை பெற்றுள்ள இந்நிறுவனம் தனது மொத்த விற்பனையில் 7.2விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் டிராக்டர் சந்தையின் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலும் தனது பங்களிப்பில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது என்று சோனாலிகா குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் முனைவர் தீபக் மித்தல் தெரிவித்துள்ளார்.