சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் மற்ற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.