சென்னை, ஆக. 3 - மக்களிடையே உள்ள இடைவெளியை குறைக்க பொதுச் சமூகத்திடம் சாதி யம் குறித்த உரையாடலை நடத்தி வருவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ் கூறினார். முன்னணியின் தென்சென்னை மாவட்ட 3வது மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதனை யொட்டி வெள்ளியன்று (ஆக.3) சைதாப்பேட்டை யில் நடைபெற்ற சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் கே. சாமுவேல்ராஜ் பேசியது வருமாறு: தமிழகத்தில் ஒன்றரை மாதத்தில் 6 பேர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டு ள்ளனர். சாதி பெருமிதம் தலித் மக்களிடமும் இருக்கிறது. இத்தகைய சாதிய மனநோய்க்கு எதிராக, ஊர்ஊராக சென்று பொதுச்சமூகத்திடம் விவாதிக்கிறோம். பாஜக தலைவர் அமித்ஷா, நாடு முழுவதும் உள்ள சாதிய, தலித் அமைப்புகளின் தலை வர்களை சந்தித்து இந்துத்துவா ஆதரவாளர்க ளாக மாற்றி வருகின்றனர். பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும், சாதி பெருமிதங்கள் குறித்து எழுதிட ஊக்குவிக்கப்படு கின்றனர். இதனால் ஆணவப் படுகொலை ஊக்கம் பெறுகின்றன. காதல் திருமணம் செய்து கொண்டதற்காக திண்டுக்கல் ராமராஜ புரத்தில் ரஞ்சினியும், ஆதரவு குரல் கொடுத்தற்காக அவளது தோழியும் சாதி வெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்டனர். இதன்மீது காவல்துறை வழக்கு பதிய மறுக்கிறது.நூறுநாள் வேலை திட்டத்தில் உள்ள தலித் மக்களின் அடையாள அட்டைகளை ஆதிக்க சக்திகள் பறித்துக் கொள்கின்றனர். நீர்நிலைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாரிவிட்டு, தலித் மக்கள் செய்ததாக கணக்குகாட்டி பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். எனவேதான், சாதியம் குறித்த உரையாடலை நடத்து கிறோம். இந்த உரையாடல் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு நேர் எதிரான போர். ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தத்திற்கு எளிய மக்களின் எதிர்வினை. இந்த உரையாடல் மக்களிடையே உள்ள இடைவெளியை குறைக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்தக் கூட்டத்திற்கு முன்னணியின் சைதை பகுதி பொறுப்பாளர் கே. மணிகண்டன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில மனித உரிமை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி. செல்வா, முன்னணியின் மாவட்டத் தலைவர் ச. லெனின், செயலாளர் ப. சுந்தரம், பொருளாளர் எஸ்.சந்தானம், சிபிஎம் பகுதிச் செயலாளர் ஜி. வெங்கடே சன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ம. சித்ரகலா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலா ளர் ஒய். இஸ்மாயில், அரசு ஊழியர் சங்க கிண்டி பகுதி பொருளாளர் மு. சாலக்குமார், முன்னணியின் அமைப்புக் குழு உறுப்பினர் எல்.குணசேகரன், பா. குமார் உள்ளிட்டோர் பேசினர். கவிஞர்கள் சி.எம்.குமார், நா.வே.அருள் ஆகியோர் கவிதை வாசித்தனர்.