சென்னை,ஏப்.24-வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவைநியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுகுற்றவாளிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான நடைமுறைகளை கண்டறியும் பணியில் ஈடுபடும்.குற்றவாளிகளை எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறிய நீதிமன்றம், நியமிக்கப்பட்ட குழு 8 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது