கோவை, ஜூன் 15- ஆழியார் பகுதியில் யானைகளின் நடமாட் டத்தை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள் ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியான நவ மலை, ஆழியார், போத்தமடை, சேத்துமடை உள் ளிட்ட பல இடங்களில் அடிக்கடி யானைகள் வனத் திலிருந்து குடியிருப்புகளுக்குள் வருகின்றன. அதி லும், ஆழியார் வனப்பகுதியிலிருந்து கடந்த சில மாதமாக யானைகள் கூட்டம், கூட்டமாக வால் பாறை மலைப்பகுதியில் உலா வருகின்றன. இதில், சனியன்று ஆழியார் பகுதியில் 2 குட்டிகளுடன் 2 யானைகள் உலா வந்தது. அந்த யானைக் கூட்டம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி வந்தது. இதையறிந்த, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி யானைகளை விரட்டினர். நவமலை வனத்திலி ருந்து வெளியேறி ஆழியார் பகுதியில் மீண்டும் யானைகள் நடமாட வாய்ப்புகள் அதிகமாக இருப்ப தால், இதனைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அடர்ந்த வனப்பகுதியிலிருந்து ஆழியார் பகுதிக்கு யானைகள் வருவதைத் தடுக்க 12 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதா கவும், அவர்கள் இரவு, பகலாக தொடர்ந்து கண்கா ணிப்பில் ஈடுபட்டு, காட்டிலிருந்து வெளியே வரும் யானைகளை மீண்டும் காட்டில் விரட்டும் நடவடிக் கையில் ஈடுபடுவர் எனவும் வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.