அரசு விரும்பியதாகக் கூறப்படும் தகவல் உண்மையில்லை.உலகமே வியந்து பார்க்கும் மாமல்லபுரத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசும் விரும்பியது. சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் தமிழில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
பட்டுச்சேலை அன்பளிப்பு
இந்தியா- சீனா பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் தமிழகத்தின் கைத்தறி, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு குறித்த கண்காட்சியை இரு தலைவர்களும் பார்வையிட்டனர். காஞ்சிப்பட்டுத் தறி, கைவினைப் பொருட்களை செய்யும் முறைகளை பிரதமர் மோடி சீன அதிபருக்கு நேரடியாகக் விளக்கினார். பித்தளையால் அழகுற தயாரிக்கப்பட்ட விளக்குகள் உள்ளிட்டவற்றையும் இதர கைவினைப்பொருட்களையும் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் ஜின்பிங்குக்கு பட்டுச்சேலை ஒன்றை பிரதமர் மோடி அன்பளிப்பாக அளித்தார்.கோலாகல வரவேற்புடன் தொடங்கி, கலை நிகழ்ச்சிகளுக்கு இடையேபேச்சுவார்த்தை, தனிப்பட்ட பேச்சுவார்த்தை என இரு தலைவர்களின் சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது.கூட்டத்துக்குப் பிறகு, இரு தலைவர்களும் பரஸ்பரம் நினைவுப் பரிசுகளைபரிமாறிக் கொண்டனர்.மதிய விருந்து முடிந்து கோவளம் ஹோட்டலில் இருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் காரில் புறப்பட்டார். பிரதமர்மோடி வாயில்வரை கையசைத்து வழியனுப்பி வைத்தார். வரும் போது எவ்வாறு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோ, அதேப்போன்று கலை நிகழ்ச்சிகளுடன் ஜி ஜின்பிங்குக்கு கோலாகல வழியனுப்பும் இடம்பெற்றிருந்தது.
நேபாளம் பயணம்
காரில் சென்னை விமான நிலையம் திரும்பிய ஜின்பிங் அங்கிருந்து தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசு உயர் அதிகாரிகள், சீன தூதரக அதிகாரிகள் சீன ஜனாதிபதியை அன்புடன் வழியனுப்பி வைத்தனர். அதே சமயம், கோவளம் ஹோட்டல்அருகே திவிடந்தையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு வந்து பின்னர் தனி விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றார்.