tamilnadu

img

குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதி நடைபெறுகிறது! - டி.என்.பி.எஸ்.சி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு கள் தொழில்நுட்பக் கோளாறு காரண மாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் கடைசி நேரத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் உள்ளிட்ட பல தேர்வு மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் இடம்பெறவில்லை. சில இடங்களில் வினாத்தாள்கள் வரவில்லை என்ற புகாரும் எழுந்தது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தேர்வர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னையில் உள்ள மூன்று  மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வுகளை நடத்த இயலவில்லை என்றும், தேர்வர்கள் நலனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.