tamilnadu

img

சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்புச் சட்டம் நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலோசனை

சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்புச் சட்டம் நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலோசனை

சென்னை, பிப்.8 - தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனிச்  சட்டம் இயற்றுவது குறித்த பரிந்து ரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணை யம் நமது ஆலோசனைகள் மீதான விவாதத்திற்காக அழைப்பு விடுத்திருந்தது. இந்த சந்திப்பில் ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கே. என்.பாஷா மற்றும் உறுப்பினர்கள் பழனிக்குமார் ஐஏஎஸ் (ஓய்வு), இராமநாதன் ஐபிஎஸ் (ஓய்வு) ஆகி யோர் பங்கேற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏற் கனவே ஜன.20 அன்று சமர்ப்பித்தி ருந்த ஆலோசனைகளை வலி யுறுத்தி, ஆணைய உறுப்பினர்கள் மத்தியில் உரையாடல் நடத்தப் பட்டது. 48 சாதி ஆணவப் படு கொலைகளில் தலையிட்ட அமைப்பு என்ற வகையில் தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குழு தெரிவித்த கருத்துக்களை ஆணையம் பதிவு செய்து கொண்டது.  இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந் திரன், தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, துணைப் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன், செயலாளர் க.கிரு ஷ்ணவேணி மற்றும் இப்பரிந்துரை களை உருவாக்குவதற்கு உத விய வழக்கறிஞர்கள் டி.ஆர்.உதய குமார், கே.சி.காரல் மார்க்ஸ் ஆகி யோர் பங்கேற்றனர். இவர்களோடு சாதி ஆணவப் படுகொலை செய்யப் பட்ட கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன், கிருஷ்ணகிரி சுபாஷின் இணையர் அனுசுயா ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு வலுவான சட்டத்தை விரை வாக நிறைவேற்றும் வகையில் ஆணையம் தனது பரிந்துரை களை செய்ய வேண்டுமென ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆணைய உறுப்பி னர்களும் தங்களது பணிகளை விரைவாக மேற்கொண்டு வருவதாகவும், சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான வலுவான சட்டம் கொண்டு வருவதற்கான தரவுகளை, சட்ட அம்சங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.