மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான குழு இந்த கொள்கையை வடிவமைத்துள்ளது.
மகளிர் கொள்கையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசு, தனியார் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக அமல்படுத்துவது, கிராமப்புறங்களில் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கூடுதலாக 50 நாட்கள் நீட்டிப்பது, 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம், கல்வி இடைநிற்றல் காரணமாக படிப்பை நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்வது, அரசு தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.