tamilnadu

img

ஜனவரி 11 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சாபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 
அதன்படி, இன்று சட்டப்பேரவை தொடங்கியதும் அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடத்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறிய நிலையில், சபாநாயர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார்.  இதை தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், ஆளுநர் உரை மீதான விவாதம் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 11-ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி நிறைவு செய்வார் என்று தெரிவித்தார்.