tamilnadu

இடியுடன் மழை: வானிலை மையம்

சென்னை, மே 17-வெப்பச்சலனத்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினாலும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு,சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும், அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் அறிவித்திருக்கிறது.அதிகபட்சமாக குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 4 செ. மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனல் காற்று வீச வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.