துளசிநாராயணன் சகோதரர் உடல்தானம் சிபிஎம், விவசாயிகள் சங்க தலைவர்கள் அஞ்சலி
கும்மிடிப்பூண்டி, டிச.31- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் பி.துளசி நாராய ணன் இளைய சகோதரர் பி.விஜயசாரதி (வயது.50), செவ்வாயன்று காலமானதை யொட்டி அவரின் உடலை குடும்பத்தினர் புதனன்று (டிச 31), சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். முன்னதாக கும்மிடிப்பூண்டியில் உள்ள பி.துளசிநாராயணன் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறு முகநயினார், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.பாக்கியம், மருத்துவர்.அனு ரத்னா, காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சம்பத் உள்பட பலர் பேசினர். சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், கல்வியாளர்.பிரின்ஸ் கஜேந்திரபாபு, விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைத்தலைவர் அனு , பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.பெருமாள், சிபிஎம் மாவட்ட செயலாளர்கள் எம்.ராம கிருஷ்ணன் (வடசென்னை) ஜி.செல்வா (மத்திய சென்னை) திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர் செல்வம், ஜி.சம்பத், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, சி.பெருமாள், இ.மோகனா, கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் அரசியல் தலைமைகுழு உறுப்பினர்கள் உ.வாசுகி, விஜு கிருஷ்ணன், கட்டுப்பாடு குழு தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய செய லாளர் கருமலையான், மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன்,ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன், ப.சுந்தரராசன், ஏ.ஜி.சந்தானம் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலை தெரிவித்னர். மறைந்த விஜயசாரதிக்கு மனைவி கிரண்மயி மனைவி, மகள் ஹர்ஷினி என்ற மகள், சந்தீப் என்ற மகன் உள்ளனர்.
