ஜெயலலிதாவின் கொள்கைக்கு விரோதமான கூட்டணி பாஜக-அதிமுக மீது தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
திண்டுக்கல், மார்ச் 1- ஜெயலலிதாவின் கொள் கைக்கு மாறாக பாஜக-அதி முக கூட்டணி அமைந்தது “அவரது முதுகில் குத்திய துரோ கச் செயல்” என தொல்.திரு மாவளவன் எம்.பி., குற்றம் சாட்டினார். சனிக்கிழமை திண்டுக்கல் தோமையார்புரத்தில் அவர் அளித்த பேட்டியில், மதுரை யில் நடைபெற்ற அதிமுக-பாஜக கூட்டணி பொதுக்கூட்ட முகப்பிலிருந்து பெரியார் அவர்களின் படம் அகற்றப்பட் டது குறித்து கேட்கப்பட்ட போது, “பெரியார் சிலையை அவர்கள் அகற்றுவார்கள்; அதேபோல் அண்ணா, ஜெய லலிதா படங்களையும் அகற் றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். மேலும், “மதுரை தமிழ் நாட்டில்தான் உள்ளது; இது வட மாநிலம் அல்ல. சங் பரி வார்களின் கனவு தமிழ்நாட் டில் நிறைவேறாது. திருப்ப ரங்குன்றம் எப்போதும் திருப்ப ரங்குன்றமாகவே இருக்கும்; அயோத்தியாக மாறாது” எனக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் முருகன் தரிசனம் அவருக்கு நல்ல வழிகாட்டி யாக அமைய வேண்டும் என் றும், தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார். பாஜக மாநிலத் தலை வர் ஆட்சியில் பங்கு கோரு வது குறித்த கேள்விக்கு, “அது எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தமா, அல்லது திரை மறைவில் நடந்த உடன் பாட்டை வெளிப்படுத்துகிறாரா என்பது தெரியவில்லை” என்றார். பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருவது புதிதல்ல என்றும், பல உறுதிமொழிகள் அளித் தும் அவர்கள் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து, அவர் பாஜகவில் இணையா மல் மற்றொரு திராவிட இயக்கத்தில் சேர்ந்திருப்பது மதச்சார்பற்ற கூட்டணிக்கு வலுசேர்க்கும் எனக் கூறி னார். இந்த சந்திப்பில் விசிக மாநில துணைச் செயலாளர் திருச்சித்தன், மாவட்டச் செய லாளர் மைதீன்பாவா, மண்டல துணைச் செயலாளர் அன்ப ரசு, தொகுதி துணைச் செய லாளர் பெர்னா, நகரச் செயலா ளர் ஆனந்த், மகளிரணி மாவட்டச் செயலாளர் சவரி யம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்
தேனி, மார்ச் 1- சிஐடியு தேனி மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங் கம், ஆண்டிபட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பா லையை தனியாருக்கு ஒப்ப டைக்கும் முயற்சியை கை விட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் ஏ. லட்சுமணதாஸ், மாவட்ட பொருளாளர் கமல்ராஜ் ஆகி யோர் தமிழக முதலமைச்ச ருக்கு அனுப்பியுள்ள மனு வில் தெரிவித்துள்ளதாவது: தேனி அருகே கா.விலக் கில் அமைந்துள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஆண்டிபட்டி சுற்றுவட்டார ஏழை தொழிலாளர்கள் மற் றும் புலம்பெயர்ந்து தாயகம் திரும்பிய தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட் டது. தொழிலாளர்கள் மற் றும் நிர்வாகத்தின் ஒத்து ழைப்புடன் ஆலை சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ள னர். தற்போது பஞ்சு கொள் முதல் செய்ய இயலாத சூழ் நிலையை காரணமாகக் கொண்டு ஆலையை தனி யாருக்கு ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படு வதாக குற்றம்சாட்டப்பட்டுள் ளது. இந்த முயற்சியை உட னடியாக கைவிட வேண்டும் என்றும், அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பஞ்சு கொள்முதல் செய்து, அனைத்து தொழி லாளர்களுக்கும் முழுநேர வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர மற்றும் தினக்கூலி தொழிலாளர் களுக்கு இந்த ஆண்டுக் கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஆண்-பெண் நிரந்தர தொழிலாளர் களுக்கு சீருடை வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. 263 தொழிலாளர்களை நிரந்த ரப்படுத்த உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதி ராக தடையாணை பெற முயற்சிப்பதை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்றும், தினக்கூலி முறை யை கைவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அறிவியல் இயக்கத்தின் 5வது குழந்தைகள் வாசிப்பு முகாம்
தேனி, மார்ச் 1- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக் கிளை சார்பில் புதுப்பட்டி கிளை நூலகத்தில் 5வது குழந்தைகள் வாசிப்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ஆபிதா பர்வீன் தலைமை தாங்கி னார். நூலகர் பிரதீபா வரவேற்றார். மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கி ணைப்பாளர் மு. தெய்வேந்திரன் முகாமைத் தொடங்கி வைத்தார். வாசிப்பு மற்றும் படைப்புத் திறன் வளர்ப்பு குறித்து எழுத்தா ளர் சக. முத்துக்கண்ணன் பேசி னார். பின்னர் குழந்தைகள் குழுக் களாகப் பிரிந்து நூல்களை வாசி த்து, தங்களின் அனுபவங்களை யும் புரிதல்களையும் பகிர்ந்தனர். அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர் நிறைவுரை ஆற்றினார். பொறுப்பா ளர்கள் திலீபன் மற்றும் கவிதா நிகழ்வை தொகுத்து வழங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் ரோஜா, பாலுதாய், சரண்யா உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயி லும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை பிரியங்கா ஒருங்கி ணைத்தார். கம்பம் கிளை பொருளா ளர் லாவண்யா நன்றி தெரிவித்தார். நிறைவாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
திருவில்லிபுத்தூர், மார்ச் 1- திருவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் கிரா மத்தைச் சேர்ந்த மீனாட்சிமுத்து எலக்ட்ரீசியன். சனிக் கிழமை காலை, அவர் தாம் கட்டி வருகிற சொந்த வீட்டிற்கு தண்ணீர் ஊற்றச் சென்றிருந்தார். வீட்டில் தண்ணீர் நனைத்து விட்டு, தண்ணீர் மோட்டா ருக்காக பயன்படுத்திய மின்பிளக்கை அகற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி யது. இதில் அவர் மயங்கி விழுந்து அசைவின்றி கிடந்தார். தகவல் அறிந்த அவரது மனைவி ராஜேஸ் வரி, உறவினர்களின் உதவியுடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
கம்பத்தில் தமுஎகச மகளிர் தின சிறப்பு வாசிப்பரங்கம்
தேனி, மார்ச் 1- கம்பம் நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வாசிப்பரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு கிளைத் தலைவர் சக.முத்துக்கண்ணன் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் கௌதம் வரவேற் புரை ஆற்றினார். பெண்கள் கிளை ஒருங்கிணைப்பாளர் ராஜிலா நிகழ்வை தொடங்கி வைத்தார். பிரபஞ்சன் படைப்புகளில் இடம்பெறும் பெண் பாத்தி ரங்களின் வடிவமைப்பு குறித்து ஆரோக்கியமான கலந்து ரையாடல் நடைபெற்றது. இதில் முரளி, ரிஸ்வான், பவித்ரா, கௌசல்யா மற்றும் மாணவர்கள் சக்திவேல், பிர மோத் உள்ளிட்டோர் பிரபஞ்சன் படைப்புகளை ஒட்டி தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் மாநிலக்குழு உறுப்பினர் சிவாஜி நிறைவுரையாற்றினார். கிளை உறுப்பினர் சுர்ஜித் நன்றி கூறினார்.