tamilnadu

img

செல்லம்மாள் காலனி பள்ளியில் திருக்குறள் வார விழா

செல்லம்மாள் காலனி பள்ளியில் திருக்குறள் வார விழா

திருப்பூர், ஜன.9 - திருப்பூர் மாநகராட்சி செல்லம்மாள் காலனி ஊராட்சி ஒன் றிய தொடக்கப் பள்ளியில் திருக்குறள் வார விழா வியாழக் கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் வே.நாகராஜ் கணேஷ்கு மார் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜெ. சுகிர்தா தலைமை ஏற்க, உலகத் திருக்குறள் பேரவை மு.நாக ராஜன்,  திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் லோக நாதன் பூபாலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டக்  கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மு.சித்ரா திருக்குறள்  சொல்லிய மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றி னார். ஆசிரியை தீபா நன்றி கூறினார்.