சென்னை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த "மக்கள் ஊரடங்கு" பெயரில் வரும் 22-ஆம் தேதி நாட்டிலுள்ள மக்கள் தன்னார்வத்தோடு தனிமையாக இருக்க அதாவது வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மக்கள் ஊரடங்குகிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் வரும் 22-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு மேல் அன்றைய நாள் முழுவதும் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை எனவும், சனியன்று இரவு கூடுதல் நேரமும், ஞாயிறன்று அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.