tamilnadu

img

வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றி.... அகமதாபாத்தில் பாஜக அரசு மூடிய தமிழ் பள்ளியை தமிழக அரசு நிர்வகிக்கும் : முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாநில அரசு மூடியதமிழ் பள்ளியை தமிழக அரசு நிர்வகிக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ் பள்ளியை தொடர்ந்து நடத்தக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என்று அச்சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

\இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தமிழ் மேனிலைப்பள்ளி உள்ளது. இது 81 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. 1920 ஆம் ஆண்டுகளில் துவங்கப்பட்ட ஆலைகளில் பணிக்குச் சென்ற தமிழ் மக்கள்பல்லாண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில்சுமார் 12 ஆயிரம் பேர் இருந்துள்ளனர். தற்போது குஜராத் வாழ் தமிழ் மக்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் பேர் இருப்பதாக அறிகிறோம். மேற்கண்ட அகமதாபாத் தமிழ் மேனிலைப் பள்ளியில் 31 மாணவர்கள் மட்டுமே தற்போது பயில்வதாகக் கூறி பள்ளியை மூட குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. 

செப்டம்பர் 23 அன்று  மதியம் 12 மணிக்குள் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ் வழிக் கல்வி பயிலும்குஜராத் தமிழ் வாழ் மக்களின்குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமிழ் பள்ளியை பாதுகாக்க குஜராத் வாழ் தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் பள்ளியை மூடக்கூடாது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் கோரிக்கை முன்வைத்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக அகமதாபாத் தமிழ் பள்ளியை தமிழக அரசு நிர்வகிக்கும் என்று செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் , குஜராத் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பள்ளியை பாதுகாக்க குஜராத் மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் அதற்காக குரல் கொடுத்த வாலிபர் சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.