tamilnadu

img

குடியுரிமை கண்டறிய புதிய கருவி உள்ளதாம்! உ. பி., காவல்துறை அடாவடி

குடியுரிமை கண்டறிய  புதிய கருவி உள்ளதாம்! உ. பி., காவல்துறை அடாவடி

பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தின் முதலமைச்சராக இருப்பவர் ஆதித்யநாத். இவர் கோரக்பூர் மடத்தின் தலைமை சாமியார் ஆவார்.  அம்மாநிலத்தின் காசியாபாத் பகுதி யின் காவல்துறை (எஸ்.எச்.ஓ - காவல் நிலைய பொறுப்பாளர்) அஜய் சர்மா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்குச் சென்று செல்போன் மூலம் இந்துவா? முஸ்லிமா? என விசாரணை நடத்தியுள்ளார். சோதனை செய்யும் நபர் முஸ்லிம் என்று தெரிய வந்தால் செல்போனை அந்த  நபரின் முதுகில் வைத்துவிட்டு, இயந்திரம் “வங்கதேசம்” என்று காட்டுகிறது ;  நீங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க குடி யுரிமைக்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அஜய் சர்மா மிரட்டி யுள்ளார். ஆனால் வங்கதேசம் என குற்றம் சாட்டப்பட்ட நபர்கள்,”தாங்கள் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார் கள். இந்த விளக்கத்தை அஜய் சர்மா ஏற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.