தீக்கதிர் செய்தி எதிரொலி திருச்சி- தாம்பரம் ரயில் நிரந்தர ரயிலாக அறிவிப்பு
சிதம்பரம், பிப் 5- தீக்கதிர் செய்தியின் எதிரொலி மற்றும் ரயில் பயணி களின் கோரிக்கையை ஏற்று தாம்பரம் –திருச்சி- தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் நிரந்தர ரயிலாக இயங்கும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது ரயில் பயணி கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சிலிருந்து- தாம்பரம் – திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் 06190/91 கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி முதல் மெயின் லைன் எனப்படும் மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக இயக்கப்பட்டு வந்தது இது பகல் நேர ரயில் என்பதால் அனைத்தும் அமரும் இருக்கைகள். காலை 5.35 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு நண் பகல் 12.30மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. மறு மார்க்க த்தில் தாம்பரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. திங்கள், வியாழன் தவிர மற்ற 5 நாட்களும் இயங்கியது. இந்த ரயில் மூலம் பண்ருட்டி, கடலூர், சிதம்பரம்,மயிலாடுதுறை,கும்பகோணம் பகுதி மக்களும், வணிகர்களும் பயனடைந்து வந்த னர். இந்த ரயில் தற்காலிக ரயிலாக ஒவ்வொரு மாதமும் நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது. ரயிலை ஜனவரி 2026 வரை மட்டும் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளி யிட்டது. இதனை அறிந்து தீக்கதிர் நாளிதழ் இந்த ரயிலின் முக்கிய துவம் மற்றும் கடலூர், மயிலாடுதுறை மாவட்ட மக்களின் அவசியத்தை கருதி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில் பயணிகளின் கருத்துகளை கேட்டு கடந்த டிசம்பர் 18-ந்தேதி இதழில் செய்தி கட்டுரையாக வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாகியது. திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளும் செய்தியை பார்த்து நல்ல முடிவு வரும் என கூறினர். அதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், ரயில் பயணி கள் சங்கத்தினர் இந்த ரயிலை நிரந்தர ரயிலாக அறிவிக்க வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பினர். இந்த ரயிலை ரயில்வே வாரியம் பிப் முதல் ஏற்கனவே உள்ளது போல் வாரத்தின் 5 நாட்கள் இயங்கும் நிரந்தர அதிவிரைவு ரயிலாக அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.