மான தாங்கமுடியாத விவசாய நெருக்கடி, இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சி, சிறு குறு தொழில்கள் முற்றாக அழிக்கப்பட்டு வரும் நிலைமை - என அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளும் இந்த பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்டன என சுட்டிக்காட்டிய சீத்தாராம் யெச்சூரி,புல்வாமா மற்றும் பாலாகோட் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து பாஜக, வெறித்தனமான இந்துத்துவா தேசியவாதத்தை முன்நிறுத்தி பிரச்சாரத்தை கொண்டு சென்றது எனவும் குறிப்பிட்டார்.
“தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக, வாக் காளர்களிடையே வெறித்தனமான முறையில் முன்னிறுத்திய மேற்கண்ட இந்துத்துவா தேசியவாதம் என்பது, கடந்த 5 ஆண்டு காலத்தில் மோடியின் ஆட்சியில் மத ரீதியாக நடத்தப்பட்ட அணிதிரட்டலின் உச்சக்கட்டமே. இத்தகைய மதவெறி பிரச்சாரம் மற்றும் அணிதிரட்டலின் விளைவாகவே மீண்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, இந்த வெற்றி என்பது கடந்த5 ஆண்டுகால பாஜகவின் தீவிர மதவாத பிரச்சாரத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட வலதுசாரி திருப்பத்தின் வெற்றியே” என்று யெச்சூரி சுட்டிக்காட்டினார்.
உதவிய தேர்தல் ஆணையம்
“5 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக பரிவாரங்கள் மேற்கொ ண்ட மதவெறி பிரச்சாரம் மற்றும் தேர்தலுக்கு முன்பு ஏற்பட்ட புல்வாமா மற்றும் பாலாகோட் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து வெறித் தனமான முறையில் முன்னிறுத்தப்பட்ட இந்துத்துவா தேசியவாதம் ஆகிய இரண்டும் இணைந்த மதவாத தேசிய வெறி உணர்வை திட்டமிட்ட முறையில் தனது தேர்தல் பிரச்சார ஆயுதமாக பாஜக மாற்றிக் கொண்டது; இந்தப்பிரச்சாரத்தை நரேந்திரமோடி தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார்; தேசிய ஊடகங்களின் ஒரு கணிசமான பகுதியும் இந்தப்பிரச்சாரத்திற்கு ஏற்றவிதத்தில் செயல்பட் டன; இந்த ஊடகங்கள் மோடி மேற் கொண்ட மதவெறி பிரச்சாரத்தில் கூட்டாளிகளாகவே செயல்பட்டன” என்று கூறிய சீத்தாராம் யெச்சூரி, “தேர்தல் ஆணையமும் பாஜக
மற்றும் மோடியின் இத்தகைய வெறித்தனமான பிரச்சாரத்தை தங்குதடையின்றி அனு மதித்ததன் மூலமாக அவர்களுக்கு உதவி செய்தது” என்றும் குற்றம் சாட்டினார்.
அளவில்லா பணத்தை கொட்டி...
இத்தேர்தலில் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு பண பலத்தை பாஜக பிரயோகித் துள்ளது என்றும் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார். அது குறித்து அவர் விவரிக்கையில், “இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் செல வழித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. தேர்தலில் செலவழிப்பதற்கு இத்தனை பெரியதொகை அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
அவர்களது கூட்டுக் களவாணிகளாக இருக்கக் கூடிய பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் - கடந்த 5 ஆண்டு காலமாக அவர்களது ஆட்சியால் பலன்பெற்ற கார்ப்பரேட் முதலாளிகள் தேர்தலில் அக்கட்சிக்கு பெருமளவிற்கு நிதி அளித்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இந்தக் கூட்டுக் களவாணிகளின் கூட்டணிதான் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது” என்றார்.
நான்கு சவால்கள்
இத்தகைய மதவாத - பணபல ஏற்பாடுகளால் பாஜக மீண்டும் வெற்றிபெற்றுள்ள நிலையில், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நான்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளன என்று கூறிய சீத்தாராம் யெச்சூரி அவற்றை விவரித்தார்.ஒன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மாண்புகளை பாதுகாப்பது - சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பது; தலித், பழங்குடி மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகள் அனைத்தையும் பாதுகாப்பது; இது மதச்சார்பின்மைக்கும் மதவெறிக்கும் இடையிலான மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமையப்போகிறது. இந்தப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் முன்னணியில் நிற்கும். இந்த நோக்கங்களுக்காக தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டும்; அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும்.
இரண்டாவது சவால், இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் அதிகாரமே கேள்விக் குறியதாக மாறியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் துவங்கி, நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய குற்றப்புல னாய்வுக் கழகம் (சிபிஐ), ரிசர்வ் வங்கி என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு நிறுவனமும் கடுமை யான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த முக்கிய மான நிறுவனங்களையெல்லாம் பலவீனப்படுத்து வதன் மூலமாக ஆர்எஸ்எஸ் - பாஜக, இந்திய நாட்டை ஒரு இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்கான சூழலை திட்டமிட்டு உருவாக்குகின்றன.
மூன்றாவது சவால், நாட்டுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள். மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களது நிதி உதவியுடன்தான் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. எனவே, அவர்களது பொருளாதாரக் கொள்கைகள் முற்றிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இருக்கப்போகின்றன.அப்பட்டமாக மக்கள் விரோதக் கொள்கைகள் அமலாகப்போகின்றன. மக்களின் துன்பதுயரங்கள் மேலும் மேலும் அதிகரிக்கப்போகின்றன. இவற்றிற்கெதிராக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் வெடிப்பது உறுதி. அத்தகைய மக்கள் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்கும்.
நான்காவது சவால், நமது கண்முன்பே ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதும், கடு மையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் எவ்வித கூச்சநாச்சமுமின்றி அரங்கேறும் என்பது தான். நேற்றையதினம் கூட தில்லியில் பத்திரிகை யாளர்கள் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பத்திரிகையாளர்கள் தன்னை விமர்சித்து செய்தி வெளியிட்டார்கள் என்பதற்காக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார் பாஜக அரசின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இத்தகைய தாக்குதலை எதிர்த்தே பத்திரிகையாளர்கள் கிளர்ந்தெழுந்திருக் கிறார்கள். எனவே, இத்தகைய அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் குடிமை உரிமைகள் மீதான தாக்கு தல்கள் வரும் நாட்களில் மேலும் தீவிரமாகும்.
அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் போராட்டம்
பாஜக ஆட்சிக்கு எதிராக, பிரதமருக்கு எதிராக, பாஜக முதலமைச்சர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்து வெளிப்படுத்துவோர், அவர்களது செயல்பாடுகளை விமர்சிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்; அவர்களது குரல்கள் நசுக்கப்படும் என்ற மோசமான சூழல் உருவாகி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத் தின்போதுகூட இத்தகைய மாற்றுக்கருத்து கூறுவோர் அல்லது விமர்சிப்போர் மீது, ‘நகர்ப்புறநக்சலைட்டுகள்’ என்று முத்திரை குத்தி அவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்கள்.ஜனநாயக எண்ணம் கொண்டோர் எச்சரிக்கப் பட்டார்கள். எனவே, இத்தகைய குடிமை உரிமைகளை, அடிப்படை உரிமைகளை பாதுகாப் பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
\இந்த நான்கு சவால்களையும் எதிர்கொள் ளும் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி பாத்திரம் வகிக்கும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மாண்புகளை பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
சித்தாந்தப் போராட்டம்
இந்தப் போராட்டங்களுடன், ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று கூறிய அவர், அது, மதச்சார்
பின்மைக்கும் இந்துத்துவா மதவெறிக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும்; இந்துத்துவா தேசியவாதத்திற்கும் இந்திய தேசியவாதத் திற்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். இந்தப்போராட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். தேர்தலில் அப்படிப்பட்ட ஒன்றுபட்ட போராட்டத்தில் நாடு முழுவதும் எதிர்க்கட்சி களை இணைக்க முடியாத நிலைமை இருந்தது.ஆனால், தமிழகத்தில் அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒன்றுபட்டு நடத்தியிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
வலுவான சந்தேகங்கள்
மக்களவைத் தேர்தலில் பாஜக-வின் வெற்றிக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யெச்சூரி, “மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதா என்பது தொடர்பான வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இப்போது வரையிலும் தலைமை தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் பதிவான வாக்குகளை தொகுத்து, அரசியல் கட்சிகள் அகில இந்திய அளவில் பெற்ற வாக்கு விழுக்காடு என்ன என்பதை வெளியிடவில்லை. மே-23 அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரையிலும் ஆணையத்தால் விவரங்களை வெளியிட முடிய வில்லை. அப்படியானால் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது. கிட்டத்தட்ட 300 தொகுதிகளில் வாக்கு பதிவு எந்திரம் காட்டிய எண்ணிக்கைக்கும், ஒப்புகைச் சீட்டு எந்திரம் (விவிபேட்) காட்டிய எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன என்ற விவரங்களும் வெளியாகி உள்ளன. எனவே, மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறைகேடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூடிப்பேசி ஒரு கூட்டு முடிவை எடுப்போம்” எனக் குறிப்பிட்டார்.
மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த
யெச்சூரி, “புதிய தேசிய வரைவு கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மும்மொழிக் கொள்கையை ஏற்பதில்லை என் றும், நிராகரிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மொழியும் தேசிய மொழிஎன்ற அடிப்படையில் சமமான அந்தஸ்துடன் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதேனும் ஒரு மொழி தொடர்பு மொழியாக மேம்பட்டு வரும். ஆனால் எந்த ஒரு மொழியையும் திணிப்பது என்பதை ஏற்க முடியாது.
ஆபத்தான கல்விக் கொள்கை
தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்விக் கொள்கையானது, மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல; மிகமிக ஆபத்தான திட்டங்களை உள்ளடக்கிய கொள்கை இது. அதை அமல்படுத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். இந்த கல்விக் கொள்கையின் மூலம்நாட்டின் ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பையும் மதவெறி நிறுவனமயமாக்கும் முயற்சி யில் மோடி அரசு இறங்கியுள்ளது. அரசிய லமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடிக்கும் விதத்தில் இந்த வரைவுக் கொள்கை அமையவில்லை. மாறாக, இந்துத்துவா மதவெறி சித்தாந்தத்தை பாடத்திட்டம் வாயிலாக கல்விக்கூடங்களில் திணிக்கும் நடவடிக்கையே ஆகும்.
இதன் விளைவாக என்ன நடக்கப் போகிறது?
வரலாற்றுப் பாடம், இந்து புராணங்களை போற்றுகிற பாடங்களாக மாறப்போகிறது. இந்தியத்தத்துவம் தொடர்பான பாடங்கள், இந்து இறையியலை போற்றுகிற பாடங்களாக மாறப்போகிறது. வரலாற்றின் இடத்தில் புராணங்களையும், தத்துவத்தின் இடத்தில் இறையியலையும் வைக்கப்போகிறார்கள். அதனால்தான் இது மிகமிக ஆபத்தானது என்கிறோம். இத்தகைய பாடத்திட்டங்கள் இந்திய ஒற்றமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் முற்றிலும் எதிரானவை. நாட்டையே சிதறடிக்கக்கூடிய ஆபத்து பொதிந்தது இந்த வரைவுக்கொள்கை. எனவேதான், இந்தக்கொள்கையை முற்றாக எதிர்ப்பது என முடிவு செய்துள்ளோம்.
எதிர்க்கட்சிகள், நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய ஒரு விரிவான போராட்டமேடையை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.இச்சந்திப்பின்போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.