சென்னை,மே 19-தென்மேற்கு பருவமழை 2 நாட்களுக்கு முன்னதாகவே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தொடங்கிவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணைஇயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது:-அந்தமான் பகுதியில் 19ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி 2 நாட்களுக்கு முன்னதாகவே, தெற்கு அந்தமான் கடல்பகுதி, தெற்கு வங்கக்கடலில் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.அங்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகமேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. அதன் தாக்கத்தால் மழையும் பெய்து வருகிறது. தெற்கு இந்திய கடல் பகுதியில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை நோக்கி காற்று வந்து கொண்டிருக்கிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து சில நாட்களில் தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து செல்லும்.இதனால் ஏற்கனவே அறிவித்துள்ள அரபிக்கடல் வழியாக சென்று கேரளாவில் ஜூன் 6ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலானமாவட்டங்களில் ஓரிரு இடங்களில்சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யவாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.