சென்னை, ஜூன் 6-தென் தமிழக மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, கோயம் புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங் களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது.பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் கொடைக்கானல் பகுதியில் தலா 7 செ. மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரபிக் கடல் பகுதியை ஒட்டியுள்ள குமரிக் கடல், மாலத்தீவு போன்ற பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அந்த பகுதியில் எச்சரிக்கையுடன் செல்லும்படியும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.