சென்னை, அக். 4- தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்க ளில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக தேனி, திண்டுக்கல், தென் காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங் கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங் களில் இடி மின்னலுடன் கூடிய மித மான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.