tamilnadu

img

அடுத்த 2 நாட்களில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 30- அடுத்த இரண்டு நாட்களுக்கு  தமிழகத்தின் நீலகிரி, கோவை,  திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்  மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சனிக்கி ழமை (நவ.30) செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் உரு வாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்  றும் புதுவையில் மிதமானது முதல்  பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்  ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ கத்தின் பெரும்பாலான மாவட்டங் களில் கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்  ளது. சென்னையில் 2 நாட்களுக்கு  மிதமானது முதல் கனத்த மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ கத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களிலும் பலத்த மழை பெய்யும். மணிக்கு 40 கி.மீ. -  50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்ப தால், குமரிக் கடல், மாலத்தீவு பகுதி,  லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்  கள் செல்லவேண்டாம் என்று அறி வுறுத்தப்படுகிறது.அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 16 செ.மீ. மழையும், மயிலாடுதுறையில் 14  செ.மீ. மழையும், புதுக்கோட்டை யில் 13 செ.மீ. மழையும் பதிவாகி யுள்ளது என்று கூறினார். மேலும், லட்சத் தீவு பகுதியில்  ஞாயிறன்று உருவாகும் காற்ற ழுத்தத் தாழ்வு நிலையால் தமிழ கத்துக்குப் பாதிப்பில்லை என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.